டேஸ்டியான கேரளா ஸ்டைல் களத்தப்பம் !

1கப் பச்சரிசியை தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் நன்றாக ஊறவைக்கவும்.

இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் வடித்த சாதம், 2 ஏலக்காய் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 1 கப் வெல்லம், 1/4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கரையும் வரை கிளறவும்.

பின், இதை வடிகட்டி அரைத்த மாவுடன் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு மற்றும், சமையல் சோடாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் பொடிப்பொடியாக நறுக்கிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

பின், மாவு கலவையை அதில் ஊற்றி குக்கரை விசில் போடாமல் 10 நிமிடங்களுக்கு வேக விடவும்.

பின் சிறிது நேரம் கழித்து ஆறியவுடன், ஒரு தட்டில் குக்கரை தலைகீழாக கவிழ்த்து தட்டினால் கேக் போன்று சாஃட்டான இப்போது களத்தப்பம் ரெடி.

இதை நீளமாகவோ அல்லது முக்கோண வடிவிலோ சிறிது சிறிதாக வெட்டி பரிமாறலாம்.