தித்திக்கும் மாம்பழத்தின் சுவைமிகுந்த ரகங்கள்...
மாம்பழங்களின் ராணி கேசர் மாம்பழம் சௌராஷ்டிரா பகுதியிலும், குஜராத்தின் கட்ச் பகுதிகளிலும் விளைகிறது. குங்குமப்பூ நிறத்தில் இதன் தோல் இருப்பதால் கேசர் என்று பெயர் வந்துள்ளது.
கிளிமூக்கு தோதாபுரி வகை மாம்பழம் தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் விளைகிறது. இவை கிளியின் மூக்கை போன்ற இருப்பதால் கோதாபுரி என்று அழைக்கப்படுகிறது.
அல்போன்சா ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து ஜூன் இறுதி வரை இவை கிடைக்கும். தோல் பிரகாசமான தங்க-மஞ்சள் நிறத்துடன் சிவப்பு நிறம் கலந்து காணப்படும்.
மாம்பழம் என்றவுடன் மல்கோவா தான் சட்டென்று நினைவுக்கு வரும். தென்னிந்தியா முழுவதும் பரவலாக இந்த மாம்பழங்கள் கிடைத்தாலும், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் அகிகம் விளைகிறது.
வணிக ரீதியாக அதிகம் பயிரிடப்படும் மாம்பழ ரகம் நீலம். சாறு நிறைந்த ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற சதைப்பற்று கொண்டது. இது மே மற்றும் ஜூலை மாதங்களில் கிடைக்கும்.
செந்தூர் மாம்பழங்கள் மற்ற ரக மாம்பழங்கள் காய்க்கும் பருவத்துக்கு முந்தைய பருவத்தில் காய்க்கும் ரகமாகும். இவ்வகை மாம்பழம் அளவில் சிறியவை, பல நாட்கள் தாங்க கூடியவை.