காய்கறிகளை விரும்பாதவர்களையும் ஈர்க்கும் வெஜிடபிள் பான் கேக்

தேவையானப் பொருட்கள்: வெங்காயம், முட்டைகோஸ், பீட்ரூட், குடமிளகாய், துருவிய கேரட் மற்றும் பீன்ஸ் - தலா 1 கப், நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு.

அரிசி மாவு, சோளமாவு - தலா 4 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, கரம் மசாலா தூள், அமச்சூர் தூள்- 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையானளவு.

அனைத்து காய்கறிகளையும், நீளமாக வெட்டிக் கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, சோளமாவு, அரிசி மாவு, கரம் மசாலாவை சேர்த்து 10 நிமிடங்கள் ஊற விடவும்.

அந்த கலவையில் வெங்காயம், அமெச்சூர் பவுடர், கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக கிளறவும்.

அடுப்பை மிதமான தணலில் வைத்து, தோசைக்கல் சூடானவுடன் சிறிது எண்ணெய் விட்டு, காய்கறி கலவையை அதில் போட்டு கையால் தடிமனாக ரொட்டி போன்று தட்டவும்.

இதை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு, பொன்னிறமாக வேக வைத்தால், வெஜிடபிள் பான் கேக் இப்போது ரெடி.

இதை சதுரமாகவோ அல்லது வட்டமாகவோ வெட்டி சூடாக பரிமாறலாம். காய்கறிகளை விரும்பாதவர்களும் ஆர்வமுடன் விரும்பிச் சாப்பிடுவர்.