கேரள ஸ்டைலில் பால் பாயாசம் செய்யலாமே!
ஒரு கடாயில் தேவையானளவு பாலை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்கவும்.
பின் கழுவி வைத்துள்ள 1 டம்ளர் பச்சரிசியை பாலில் சேர்க்கவும்.
மிதமான தணலில், அரிசி வெந்து பால் சுண்டி வரும் வரை கிளறவும்.
பால் பாதியாக குறைந்து, கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் சர்க்கரை சேர்க்கவும்.
சர்க்கரை நன்றாக கரைந்து பாயசம் லேசான இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறும் போது, ஏலக்காய் துாள் சேர்க்கவும்.
இதில், வறுத்த முந்திரியை சேர்த்தால், அவ்வளவு தான் சுவையான கேரளா ஸ்டைல் பால் பாயசம் ரெடி.