டிஜிட்டலில் மீண்டும் வெளியாகும் ‛நாயகன்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான படம் நாயகன்.
இந்த படத்தில்தான் சரண்யா நாயகியாக அறிமுகமானார்.
ஜனகராஜ், டெல்லி கணேஷ், கார்த்திகா, நாசர், தினு ஆனந்த், தாரா உள்பட பலர் நடித்திருந்தனர்
மும்பை தாராவி பகுதியில் தாதாவாக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகி இருந்தது.
படம் வெளியாகி 36 ஆண்டுகளுக்கு பிறகு நாயகன் படம் மீண்டும் வெளிவருகிறது.
படம் வெளியாகி 36 ஆண்டுகளுக்கு பிறகு நாயகன் படம் மீண்டும் வெளிவருகிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு, நவீன ஒலி அமைப்பு இணைக்கப்பட்டு வருகிற நவம்பர் 3ம் தேதி வெளிவருகிறது.