இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

இந்தியாவில் 2024ல் 15.6 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.

இதில் மார்பக, நுரையீரல், வாய் உட்பட பல வகைகள் உள்ளன.

உலகில் முதலில் புற்று நோய்க்கான ரேடியோதெரபி சிகிச்சைக்கு அடித்தளமிட்டவர் பிரான்ஸ் பெண் விஞ்ஞானி மேரி கியூரி.

இருமுறை நோபல் பரிசு பெற்றவர். இதை அங்கீகரிக்கும் விதமாக இவரது பிறந்த தினமான நவ.7ல், மத்திய அரசு சார்பில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கபடுகிறது.

புற்றுநோய் வராமல் தடுப்பது,துவக்க நிலையிலேயே கண்டறிதல், சிகிச்சை பெறுவதை வலியுறுத்துவதே இத்தினத்தின் நோக்கம்.

மேலும் புற்றுநோய் பற்றிய தகவல் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுதுவது, இந்த தினத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்த ஆண்டின் கருப்பொருள் தனித்துவத்தால் ஒன்றுபடுவது ஆகும்.

ஒவ்வொரு புற்றுநோயின் தனித்துவத்தையும், அதேநேரத்தில் அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கான கூட்டுப் பணியையும் வலியுறுத்துகிறது.