இன்று உலக முதியோர் தினம்
உலகில் 60 வயதை கடந்த முதியோர் எண்ணிக்கை 1995ல் 54 கோடியாக இருந்தது. 2025ல் 120 கோடியாக உயர்ந்தது. இது 2050ல் 210 கோடியாக அதிகரிக்கும் என ஐ.நா., கணித்துள்ளது.
முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி அக்.1ல் உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
60 வயதினை கடந்த இவர்களது வழிகாட்டுதல் இளம் தலைமுறையினருக்கு மிக அவசியம்.
முதியவர்கள் வாழ்க்கையில் பல அனுபவங்களை பெற்றவர்கள். முக்கிய பிரச்சினைகளில் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு செயல்படும் போது அது நன்மையை பயக்கும்.
முதியோர்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்வது, வாழ்வதற்கான ஒரு நல்ல சூழலை உருவாக்கிக் கொடுப்பது அவசியம்.
ஒரு குடும்பத்தில் மூத்தவர்கள் இருப்பது அந்த குடும்பத்திற்கே ஒரு வெளிச்சம் போன்றது என்பதை இன்றைய தலைமுறையினர் உணர வேண்டும்.
குழந்தைப் பருவம் போல முதுமைப் பருவமும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்பதை உணர்ந்து, அவர்களை மகிழ்விப்போம், மதிப்போம்.