இன்று தேசிய ரத்த தான தினம்
தேசிய ரத்த தான தினம் ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 1ல் கொண்டாடப்படுகிறது.
இதன் மூலம் ஒருவருக்கு ரத்த தானம் செய்வதற்கும் நீங்கள் வழிகாட்டியாகலாம்.
இன்று நீங்கள் ரத்த தானம் செய்தால் அது நாளை உங்களுக்கு கூட பயன்படலாம்.
ரத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மக்கள் ரத்த தானம் செய்வதற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான அனைவரும் ரத்த தானம் செய்யலாம். உடல் எடை, 45 கிலோகவும், அதற்கு மேல் உள்ளவர்களும் செய்யலாம்.
பொதுவாக, எல்லா இடங்களிலும் ஒரு நபரிடம் இருந்து, 350 மி.லி., ரத்தம் மட்டும் எடுக்கப்படும். 90 நாட்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.
ரத்ததானம் செய்பவருக்கு சுத்திகரிக்கப்பட்ட உபகரணங்ளையே பயன்படுத்துவதால் தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை.
ரத்த தானம் செய்வதன் மூலம், புதிய ரத்தம் மீண்டும் உற்பத்தியாகி விடுவதால், மேலும் உடல் நலத்துடனும், உற்சாகத்துடனும் இருப்பீர்கள்.