இன்று உலக அஞ்சல் தினம்
உலகில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன், தகவல் பரிமாற்றத்தில் 'தபால்' முக்கிய பங்கு வகித்தது.
அக்டோபர் 9, 1874 அன்று சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் (UPU) நிறுவப்பட்டது.
உலக தபால் அமைப்பு 1874ல் தொடங்கப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் அக்.,9ல் உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1969 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடந்த விழாவில், இந்த நாள் உலக அஞ்சல் தினமாக அறிவிக்கப்பட்டது
'ஒரு அஞ்சல் நெட்வொர்க், எல்லையற்ற சாத்தியங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
இந்த அமைப்பில் இந்தியா உட்பட 150 நாடுகள் உள்ளன.
இந்தியாவில் தபால் துறையின் மகத்துவம் பற்றி இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதமாக அக். 6 - 10, தேசிய தபால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.