சிவாஜி கணேசன்: தமிழ் சினிமாவில் இந்த விருதை முதன்முதலாக பெற்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 1984ம் ஆண்டு இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

ரஜினிகாந்த்: 2000ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த்க்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

கமல்ஹாசன்: 2014ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

விஜயகாந்த்: 2024ம் ஆண்டு நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த்-க்கு இந்த விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்திருந்தது. ஆனால் இந்த விருது அவர் மறைந்தபிறகே அறிவிக்கப்பட்டது.

அஜித்குமார்: நடிப்பு, கார் ரேஸ் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் நடிகர் அஜித்குமாருக்கு இந்தாண்டு (2025) பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.