நடுக்குவாதத்தை தவிர்க்க முடியுமா?

மைய நரம்பு மண்டலத்தை சிதைக்கும், முதியோரைத் தாக்கும் நடுக்குவாத நோயை, 'முதன்மை பார்கின்சோனிசம்' என்கிறோம்.

உடலில் உள் உறுப்புகளை ஒருங்கிணைத்து இயங்க வைக்கும் மூளையின் திறன் பாதிக்கப்படுவதால், நடுக்குவாத நோய் ஏற்படுகிறது.

உடல் செயல்பாடுகள் மெதுவாக குறையும்; நாளடைவில் தீவிரமாகும். ஆரம்ப நிலையில், உடல் நடுக்கம் , விறைப்பு , நடப்பது, உட்காருவது, படுப்பது, எழுந்திருப்பதில் சிரமம் ஏற்படும்.

கை விரல்கள் தானாகவே நடுங்குவது இந்நோயின் முக்கிய அறிகுறி. 'ஹைபோகைனெடிக் ரிஜிட் சிண்ட்ரோம்' என்ற அசைவு இல்லாத நிலையில், சிலை போல் நிற்பர்.

மூளையில் டோபமைன் சுரக்கவில்லை என்றாலும், பூச்சிக்கொல்லி மருந்து பாதிப்பு, தலையில் அடிப்பட்டு காயம் ஏற்பட்ட பிறகு இந்நோய் வரலாம்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஒரு சதவீதம் பேரையும், 50 வயதிற்குள் அரிதாகவும் பாதிக்கிறது.

முற்றிலும் குணப்படுத்த இயலாது. வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்க வழக்கங்களை முறையாக கடைப்பிடித்தால், நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

தீவிர அறிகுறிகள் இருப்பவர்களுக்கு, டிபிஎஸ் என்ற மைக்ரோசாப்ட் எலக்ட்ரோடு இம்பிளான்டேஷன் என்ற சிகிச்சை முறையில் நோயை 75 சதவீதம் கட்டுப்படுத்த முடியும்.

புரதச்சத்து உள்ள உணவுகள், உலர் கொட்டைகள், ஸ்ட்ராபெர்ரி, இயற்கையான காய்கறிகள், கீரை வகைகள் டோபமைன் சுரப்பை அதிகப்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.