வெள்ளெழுத்து என்றால் என்ன?

வயதாகும் போது அருகிலுள்ள பொருளை அவ்வளவாக பார்க்க முடியாது, எழுத்துக்களை வாசிக்க முடியாததை வெள்ளெழுத்து என்கிறோம்.

நமது பார்வையை 'போக்கஸ்' செய்ய முடியாத நிலை இது. இதனை 'பிரசவோபியா' என்கிறோம்.

இந்த பிரச்னையுள்ளவர்கள் சற்று தள்ளி வைத்து படிப்பதை பார்க்கலாம்.

வயதாகும் போது கண் நரம்புகளில் ஏற்படும் தளர்ச்சி, கண்ணின் நெகிழ்வுத்தன்மை குறைவது போன்றவை இதற்கு காரணம்.

இதனை சில கண் பயிற்சிகள் மூலம் சரி செய்ய வேண்டும்.

கண்ணை அடிக்கடி இமைக்க வேண்டும். துாரத்திலும், அருகிலும் அடிக்கடி பார்க்க வேண்டும். கண்ணில் ஈரத்தன்மை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் தயாரித்த சுத்தமான நெய், ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றை கண்ணிற்கு வெளியே தேய்க்கலாம். திரிபலா மருந்து சாப்பிடலாம்.

முருங்கை இலையை காயவைத்து கல் உப்பு சேர்த்து பொடித்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுவது நல்லது. இவையெல்லாம் வெள்ளெழுத்து ஏற்படுவதைக் குறைக்கும்.