பசுமஞ்சள் பேஸ்ட் பல நோய்களுக்கு ஒரு மருந்து… வீட்டிலேயே செய்யலாம்.

பசு மஞ்சள் என்பது நீங்கள் பொங்கல் அன்று படைக்க பயன்படும் மஞ்சள் கொத்தில் இருப்பது.

பசு மஞ்சள் பேஸ்ட் செய்ய 1 கிலோ பசு மஞ்சளுக்கு, 100 கிராம் மிளகு, 100 கிராம் பூண்டு, கால் கிலோ சின்ன வெங்காயம் தேவை.

மஞ்சள், சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோல் சீவி மிளகுடன் தண்ணீர் சேர்க்காமல் நன்கு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு வேளை உணவு எடுத்துக் கொண்ட பத்து நிமிடங்கள் கழித்து இந்த பசுமஞ்சள் சாப்பிட வேண்டும். காலை அல்லது இரவு நேரத்தில் எடுத்துக் கொள்வது மிகச்சிறந்தது.

அரை ஸ்பூன் அளவு பேஸ்ட்டை எடுத்து உருண்டையாக உருட்டி சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிக்கலாம் அல்லது அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

புற்றுநோய் திசுக்களை வளரவிடாமல், அவற்றின் செல்களைத் தாக்கி அழிக்கும் தன்மை இதற்கு உண்டு.

மூளையின் செயல்பாட்டைத் தூண்டி, ஞாபகத் திறனை அதிகரிக்கச் செய்யும்.

உடல் உள்ளுறுப்புகளில் உள்ள இன்ப்ளமேஷன் எனப்படும் உள்காயத்தை குறைக்கும்.