குழந்தைகளை கவரும் ட்ரை கலர் ஜூஸ்! ரெசிபி இதோ!

தேவையானவை: துருவிய கேரட் - ஒன்று, தயிர் - ஒரு கப், மிளகுத் துாள்

நன்கு ஆய்ந்து கழுவிய புதினா, கொத்தமல்லி- ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கேரட் மற்றும் கொத்தமல்லி, புதினா இவற்றை தனித்தனியாக மிக்ஸியில் நீர்விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

ஜூஸ் டம்ளரில் மிளகுப் பொடி, உப்புப் போட்டு கொத்தமல்லி, புதினா ஜூஸை விடவும்.

அதன் மேல் தயிர் விட்டு, பிறகு கேரட் ஜூஸை சேர்க்கவும்.

அடியில், பச்சை, நடுவில் வெள்ளை, மேலே ஆரஞ்சு என்ற ட்ரை கலர் ஜூஸ் தயார்.