பொங்கலோ பொங்கல்! இந்தியா முழுவதும் பொங்குது...

நம் நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களிலும், பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பொங்கல் பண்டிகை என்றால், போகியில் துவங்கி காணும் பொங்கலில் முடிகிறது.

ஆந்திராவில் பொங்கல் பண்டிகை, தமிழகத்தைப் போலவே கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி கொண்டாடி, 2 வது நாள், மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.

குஜராத்தில், ஜனவரி 14ம் தேதி, மகர சங்கராந்தி அல்லது உத்ராயன் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையில் பட்டங்களை விட்டு மகிழ்கின்றனர்.

பீகார் மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகளில் சக்ராத் அல்லது கிச்சடி என்று அழைக்கப்படுகிறது

மஹாராஷ்டிராவில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் பண்டிகை என்றால், அது மகர சங்கராந்தி தான். இந்த நன்னாளில், எள் உருண்டை, அல்வா, போளி போன்றவற்றைச் செய்து சாப்பிடுகின்றனர்.

பஞ்சாபில், லோஹ்ரி என்ற பெயரில் ஆண்டுதோறும், ஜன 13ல் கொண்டாடப்படுகிறது. அன்று, பட்டம் விட்டும், இரவு நெருப்பைக் கொளுத்தியும் கடவுளை வணங்குகின்றனர்.