ஸ்கை டைவிங் செய்த பிரியா பவானி சங்கர்
முன்னணி நடிகை பிரியா பவானி சங்கர் முதல்முறையாக ஸ்கை டைவிங் செய்த அனுபவங்களை பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலானது
கடந்த 2017ல் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்
தொடர்ந்து, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண்விஜயுடன் மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
சமீபத்தில் திரைக்கு வந்த யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர்.
அதையடுத்து ருத்ரன், அகிலன், பத்து தல, இந்தியன்-2 என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது தனது காதலருடன் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள பிரியா பவானி சங்கர் அங்கு ஸ்கை டைவிங் செய்த வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதோடு முதன்முறையாக ஸ்கை டைவிங் செய்த தனது திரில்லிங்கான அனுபவத்தையும் அவர் வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.
பிரியாவின் இந்த துணிச்சலான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.