பசுமை திருமணம் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்...
ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, அயலான், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
'பசுமை திருமணம்' என்பது சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் திருமணத்தை செய்வது. அப்படி தான் தனது திருமணத்தை நடத்த உள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
திருமண அழைப்பிதழ் கூட பேப்பரில் இல்லாமல் டிஜிட்டல் அழைப்பிதழ் மட்டுமே அளித்துள்ளார்களாம்.
திருமண நிகழ்வில் பட்டாசுகளை வெடிப்பது உள்ளிட்டவற்றிற்கும் 'நோ' சொல்லிவிட்டார்களாம்.
'பசுமை திருமணம்' நடத்துவதற்காக தனி குழு ஒன்றையும் ரகுல் ப்ரீத்தும் அவரது வருங்காலக் கணவர் ஜாக்கியும் பணிக்கு வைத்துள்ளார்கள் என்று தகவல்.
திருமணத்திற்கு முந்தைய மற்ற சடங்குகள் நாளை முதல் கோவாவில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.
இத்திருமணத்தில் இரு வீட்டாரது நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்களாம்.
முன்னதாக ரகுல், ஜாக்கி இருவரும் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலிலும் வழிபாடு நடத்தி உள்ளனர்.