தசைப்பிடிப்பை சரிசெய்யும் ரம்புட்டான் பழம்

அதிக தீவிர பயிற்சிக்குப் பின், கைகள் மற்றும் கால்களில் தசைகள் பிடிப்பு ஏற்படுவதைத் தடுக்க ரம்புட்டான் பழத்தைச் சாப்பிடுவது நல்லது.

ரம்புட்டான் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. வயதானவர்கள் சீசன் நேரத்தில் இரண்டு ரம்புட்டான் பழங்களை உட்கொள்வதால், வெள்ளை ரத்த அணுக்களின் திறனை அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.

உடம்பில் உள்ள நச்சுகளை வெளியேற்ற சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக இந்த பழங்கள் பயன்படுகிறது.

இந்த பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இதைச் சாப்பிட்டு வந்தால் குடல் இயக்கத்தைச் சரிசெய்து மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.