புளியங்காய் துவையல் ரெசிபி

தேவையானப் பொருட்கள்: துண்டாக்கிய புளியங்காய் - 1 கப், காய்ந்த மிளகாய் - 6, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன்.

பூண்டு, சீரகம், பெருங்காயத் துாள், எண்ணெய் - சிறிதளவு, கருவேப்பிலை, தண்ணீர், உப்பு - தேவையான அளவு.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, கருவேப்பிலை, பெருங்காயம் போட்டு வதக்கவும்.

பின், துண்டாக்கிய புளியங்காய் சேர்த்து வதக்கி இறக்கவும்.

சூடாறியவுடன், சீரகம், உப்பு, தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

இப்போது, வித்தியாசமான சுவையுள்ள, புளியங்காய் துவையல் ரெடி. தயிர் சாதம், இட்லி, தோசையுடன் சைடு டிஷ்ஷாக சாப்பிட சுவை அள்ளும்.