அவசர தேவைக்கு தயிர் தோசை! ரெசிபி இதோ!
சமைக்க நேரம் இல்லாமல், அவசரமாக பணிக்கு செல்லும் பெண்களுக்கு, தயிர் தோசை கை கொடுக்கும். இதை தயாரிக்க வெறும், ஐந்து நிமிடம் போதும். காலை, மாலை டிபனுக்கு ஏற்றது.
தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 1 கப், தயிர் - மாவு கரைக்க தேவையான அளவு, உப்பு - சுவைக்கு தேவையான அளவு, நெய் அல்லது எண்ணெய் தோசைக்கு தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு, உப்பு மற்றும் தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கட்டியில்லாமல் கரைக்கவும், இதை ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மாவு கரைத்தவுடன் பயன்படுத்தலாம்.
அடுப்பில் தோசைக்கல்லை வைக்கவும். சூடானதும் தோசை வார்க்கவும். சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் ஊற்றவும்.
இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்தால், சுவையான தயிர் தோசை தயார்.
தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் சூடாக சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.