ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு ஹெல்த்தியான சோளப் பணியாரம்... ரொம்ப ஈஸி !
தேவையான பொருட்கள்: மக்காச்சோளம் - 1 கப், உளுந்து - 1/4 கப், வெந்தயம் - 1 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 200 கிராம், பச்சை மிளகாய் - 4, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் - தேவையான அளவு.
சோளம், உளுந்து மற்றும் வெந்தயத்தை சுத்தம் செய்து, தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊற வைத்து அரைத்து, உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை அதில் சேர்த்து கலக்கவும்.
பின், பணியாரக் கல்லில் எண்ணெய் தடவி, சிறிது சிறிதாக ஊற்றி இரு பக்கமும் நன்றாக வேக விட்டால், சோளப் பணியாரம் இப்போது ரெடி.
ஆரோக்கியமான, சுவையான இந்த மக்காச்சோள பணியாரத்தை அனைத்து வயதினரும் விரும்பிச் சாப்பிடுவர்.