பனிக்காலத்தில் உதடுகளில் வறட்சி, வெடிப்பு இருக்கா.. டிப்ஸ் டிப்ஸ்!!

குளிர் காலத்தில் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்னை, உதடு வெடிப்பு. உதட்டில், முடி, வியர்வை சுரப்பி போன்ற பாதுகாப்பு படலங்கள் இல்லை.

இதனால், வறட்சி, வெடிப்பு போன்றவை இந்த காலத்தில் வாட்டி எடுக்கும். குளிர் பாதிப்புகளிலிருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்க எளிமையான இயற்கை வழிகள் சில...

தேங்காய் எண்ணெயை தினமும் இருமுறை உதடுகளில் தடவி, சில நொடிகள் மசாஜ் செய்யவும். இது, வறண்ட உதடுகளுக்கு ஈரப்பதத்தை சேர்க்கும், வெடிப்பும் மறையும்.

தேனிலிருக்கும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வெடித்த உதடுகளில், தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். இதை நேரடியாகவோ, கிளிசரின் கலந்து பயன்படுத்தலாம்.

கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் கழுவலாம்.

வெள்ளரிக்காய் துண்டை, உதடுகளில் ஓரிரு நிமிடங்கள் தேய்க்கவும். பத்து நிமிடங்கள் சாறு உதட்டிலிருக்கும் படி விட்டு பின்னர், கழுவவும். நல்ல பலன் கிடைக்கும்.

ஆரோக்கியமான உதடுகளுக்கு, வயது, உடல் எடைக்கேற்ப தேவையான அளவு நீரை நாள்முழுவதும் எடுத்துக்கொள்வதை உறுதி செய்துகொள்ளுங்கள்.