மது பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க... இதோ 5 டிரிக்ஸ் !
ஆர்வத்திற்காக மற்றும் கூட்டமாக கொண்டாட்டத்தின் போது மது போதையை நுகர ஆரம்பித்தவர்கள் தான், பின்பு ஒரு நாளில் மதுவை கைவிட முடியாத அளவிற்கு அடிமையாகின்றனர்.
மது பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள். இது ஆரோக்கியமான பழக்கங்களை வளர்க்கவும், குடிப்பழக்கத்தின் வலையில் விழுவதைத் தவிர்க்கவும் உதவும்.
ஒரு சிலர் பிரிட்ஜில் மதுபானங்களை வைப்பதால் ஆரோக்கியம் கேள்விக்குறியாவதுடன், மதுவுக்கு அடிமையாகி பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவர். எனவே வீட்டில் இருப்பு வைக்காதீர்கள்.
உணர்ச்சிவசத்தில் குடிக்காதீர்கள்...மனைவி அல்லது காதலியுடன் தகராறு, வேலைப்பளு போன்ற உணர்ச்சிகரமான சமயத்தில் மதுவை நாடிச் செல்லாதீர்கள்; இது உணர்ச்சியை மேலும் ரணமாக்கும்.
பார்களுக்கு செல்லாதீர்கள்... மது அருந்தும் நண்பர்கள் கம்பெனிக்காக பாருக்கு அழைத்தால் செல்லாதீர்கள். அந்த சூழல், 'குடித்தால் தான் என்ன?' என்ற மனநிலைக்கு அழைத்துச் செல்லும்.
பீர் தானே என அசட்டை கூடாது... பலரும் குறைந்த ஆல்கஹால் உடைய பீரில் துவங்கி, பின் ஹாட் ட்ரிங்க்ஸ் நோக்கிச் செல்வர். அடிக்கடி பீர் குடிப்பதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படக்கூடும்.
குடி பழக்கம் உடைய நண்பர்களுடன் பழகுவது தப்பில்லை. ஆனால் அவர்களுடன் வெளியே செல்வது, இரவு தங்குவது போன்றவற்றால் நீங்களும் குடிக்க வாய்ப்புள்ளதால், முடிந்தளவு தவிர்க்கவும்.