பாதுகாப்பாய் பட்டாசு வெடிங்க குழந்தைகளே...

ஸ்வீட்ஸ், புது டிரெஸ் ரகம் ரகமாக பெற்றோர் குட்டீஸ்களுக்கு வாங்கி கொடுத்தாலும் அவர்கள் கண் எல்லாம் பட்டாசு மேல் தான்.

புஸ்வானம் புஸ்ஸுனு போகாமல் சில வெடிக்கவும் செய்யும். அதனால் பட்டாசு கொளுத்தும் நேரம் முழுவதும் குழந்தகளுடன் இருங்கள்.

நாம் சமையல், வேலை என பிசியாக இருந்தால், குழந்தைகள் ஆர்வம் மிகுதியால், தீப்பற்ற தீப்பெட்டி, பத்தி, மற்றும் பட்டாசை எடுத்து கொண்டு ஓடிவிடக்கூடும்.

அதனால் மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், பட்டாசுகள் போன்ற எளிதில் தீ பற்றும் பொருட்களை அவர்களிடமிருந்து பாதுகாத்து வைக்கவும்.

பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு வாளி தண்ணீர் எப்போதும் பட்டாசு வைக்கும் இடத்தில் வைக்கவும்.

பட்டாசு பெட்டிகளுடன் மறக்காமல் முதலுதவி பெட்டி அவசியம்.

பட்டாசுகளை கொளுத்த தீப்பெட்டி அல்லது லைட்டர்களை பயன்படுத்த வேண்டாம். கம்மிதிரி, பத்திக் கொண்டு பற்றவைக்கலாம்.

ஒரே நேரத்தில் பல பட்டாசுகளை கொளுத்த வேண்டாம். இரண்டு பட்டாசுகளை சேர்த்து, சொந்தமாக பட்டாசுகளை தயாரிக்க கூடாது