மழை காலத்தில் கர்ப்பிணிகள் பாதுகாப்பு குறிப்புகள்...

மழைக்காலம் என்றாலே தொற்றுக்களின் ஆதிக்கம் தலைதூக்க கூடும். குழந்தைகள் பெரியவர்கள் மட்டும் அல்ல, கர்ப்பிணிகளும் கூடுதலாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.

டெங்கு, மூளைக்காய்ச்சல் மற்றும் மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் கர்ப்பிணிகளுக்கு உண்டு. உடல் செயல்பாட்டுக்கு தண்ணீர் மிக மிக முக்கியம்.

தண்ணீரை அப்படியே குடிக்காமல் காய்ச்சி வடிகட்டி குடித்து வருவது மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாக்க செய்யும்.

சத்தான உணவை கடைப்பிடிப்பது தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆரோக்கியமானது.

பருவமழை பல நோய்களை கொண்டு வரும் நிலையில் அதிக புரதச்சத்து உள்ள உணவை பின்பற்றுங்கள். இது நல்ல ஊட்டச்சத்தை அளிக்கிறது.

மழைக்காலத்தில் உணவை குளிர்ச்சியாக இல்லாமல் வெதுவெதுப்பான சூட்டில் எடுத்துகொள்வது நல்லது. ஆரோக்கியமான சூப்களை குடிப்பது சிறந்த தேர்வாக இருக்கும்.

கீரைகள் அல்லது முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகள் தவிர்ப்பது கிருமித்தொற்றை தடுக்க செய்யும்.

மழைக்காலமும் நீரிழப்புக்கு ஆளாககூடிய நிலை. உடலில் நீரேற்றம் இல்லாத நிலையில் சோர்வு, தலைவலி. தலைச்சுற்றல் போன்றவற்றின் அபாயங்களை அதிகரிக்கிறது.

தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் பாதிப்பை தடுக்கலாம். நீர் குடிப்பது சிரமமாக இருந்தால் அதில் பழத்துண்டுகளை சேர்த்து ஊறவைத்து குடிக்கலாம்.

குளிராக இருப்பதை கவனித்தால் குளிர் மற்றும் காய்ச்சல் அபாயங்களை தடுக்கும் வகையில் ஆடைகள் இருக்க வேண்டும். அதே நேரம் இறுக்கமான ஆடைகள் தவிருங்கள்.

இயற்கையான கிருமி நாசினியாக வெந்நீரில் வேப்ப இலைகளை சேர்த்து குளிக்கலாம். இது ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் உணர வைக்கும்.