பளப்பளக்கும் சமந்தாவின் சருமம்... ரகசியம் இதானா!

நடிகை சமந்தா தனது முகம் மற்றும் கூந்தலை பாதுகாக்க அதிகமாக கவனம் செலுத்துகிறார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு தனது அழகிய சருமத்தின் ரகசியம் பற்றி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தனது சரும ஆரோக்கியத்தை பராமரிக்க தினமும் காலையில் ஒரு கிளாஸ் கொலாஜன் பானத்தை உட்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

கொலாஜன் என்பது நம் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க, கடின தன்மையை குறைக்க, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க, ஹைட்ரேட்டாக வைத்திருக்க தேவைப்படும் ஒரு அத்தியாவசிய புரதம்.

கொலாஜன் நமது முழு உடல் புரத உள்ளடக்கத்தில் 25% முதல் 35% வரை உள்ளது. நம் சருமத்தின் தோற்றம் மற்றும் இளமைத்தன்மையை பராமரிப்பதில் நமது உணவு பழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

வயதாகும் போது நம் உடலில் இயல்பாகவே கொலாஜன் உற்பத்தி குறைகிறது. எனவே தான் வயதாகும் போது சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படுகின்றன.

சமந்தா தனது நாளை தொடங்கும் போது, ஒரு கிளாஸ் தண்ணீரில் கொலாஜன் பவுடர் கலந்து குடிக்கிறார். இது அவர் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக தெரிவித்தார்.