சீசன் ஸ்பெஷல்... நாவல் பழ சட்னி!
முதலில் நாவல் பழத்தை உப்பு கலந்த தண்ணீரில் போட்டு நன்றாக கழுவிக் கொள்ளவும்.
பின், கத்தியால் சதை பகுதியை மட்டும் கீறி எடுக்கவும்.
இதனுடன், தேவையானளவு பூண்டு, தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சை சாறு, புளி சேர்த்து மிக்ஸி ஜாரில் சட்னி பதத்துக்கு அரைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை கொத்தை போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
அவ்வளவுதான் இப்போது சுவையான நாவல் பழ சட்னி ரெடி.
மருத்துவ குணம் நிறைந்த இந்த சட்னி, ஊதா நிறத்தில் இருப்பதால், குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவர்.
இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.