உண்மையான மகிழ்ச்சி எது? செனிக்காவின் தன்னம்பிக்கை வரிகள் !

எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என அறிவதே மிகப்பெரிய விசயம்.

ஒரு பாதையைக் கண்டுபிடியுங்கள் அல்லது ஒரு பாதையை புதிதாக உருவாக்குங்கள்.

அழகைக் கண்டு திகைக்காமல், என்றும் நீடித்திருக்கும் குணங்களைத் தேடுங்கள்.

வளர்ச்சிக்கான பாதை மெதுவானது. ஆனால், அழிவுக்கான பாதை விரைவானது.

பகிர்ந்து கொள்ள நண்பர்கள் இல்லாவிட்டால், எந்த நல்ல செயலும் இனிமையானது அல்ல.

தன்னைத்தானே ஆளக்கூடியவரே மிகவும் சக்திவாய்ந்த நபர்.

உழைப்பு உடலைப் பலப்படுத்துவதைப் போல், சோதனைகள் மனதைப் பலப்படுத்துகின்றன.

எதார்த்தத்தை விட கற்பனையால் தான் பலரும் அடிக்கடி துன்பப்படுகின்றனர்.

உண்மையான மகிழ்ச்சி என்பது, எதிர்காலத்தைப் பற்றிய கவலையில்லாமல் நிகழ்காலத்தை அனுபவிப்பது தான்.

உங்களுக்குத் தெரியாவிட்டால், கேளுங்கள். அப்போது நீங்கள் முட்டாளாக இருப்பீர்கள். ஆனால் வாழ்நாள் முழுவதும் ஒரு புத்திசாலியாக இருக்கலாம்.