மாணவியருக்கு எதிரான பாலியல் தொல்லை... புகார் அளிப்பது எப்படி?

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் பள்ளிகளிலும் பாலியல் குற்றங்கள் நடப்பதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, மாணவியருக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து, பள்ளிகளிலுள்ள 'மாணவர் மனசு' பெட்டியில் எழுத்துப்பூர்வமான புகாராக அளிக்கலாம்.

மேலும், '14417' என்ற பள்ளிக்கல்வி துறையின் தொலைபேசி எண்ணிலும் புகார் அளிக்கலாம்.

குழந்தைகள் பாதுகாப்புக்கான '1098', மகளிர் பாதுகாப்புக்கான '181' மற்றும் போலீசின் அவசர உதவி எண்ணான 100 ஆகிய உதவி எண்களில் புகார் அளிக்கலாம்.

பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.