தலைவலிக்கான காரணங்கள் சிலவற்றை அறிவோமா...

தலைவலி ஏன் வருகிறது என்பது குறித்து சில அடிப்படையான விஷயங்களை புரிந்து கொள்வது அவசியம்.

மற்ற வயதினரை விட 15 - 30 வயதிற்குட்பட்டவர்களுக்கே தலைவலி அதிகம் வருகிறது. அதிலும் ஆண்களை விடவும் பெண்களுக்கு தலைவலி அதிகம்.

மைக்ரேன் தலைவலி தான் பொதுவானது. பெண்களை அதிகம் பாதிக்கக் கூடியது. ஹார்மோன் மாறுபாடுகள் மூளையில் சுரக்கும் நரம்பு செல்களில் ஏற்படும் மாறுபாடுகளால் பெண்களை அதிகம் பாதிக்கிறது.

அதிக வேலை, சரியான துாக்கம் இல்லாமல் இருப்பது போன்றவற்றால் வருவது தலை பாரமாக இருக்கும். அதேநேரம் வலியை பொறுத்துக் கொண்டு வேலைகளை செய்ய முடியும்.

சில நேரங்களில் டென்ஷன் தலைவலி, மைக்ரேன் தலைவலியாக மாறலாம்; மைக்ரேன் தலைவலி, டென்ஷன் தலைவலியாகவும் மாற வாய்ப்புகள் அதிகம்.

துாக்கமின்மை, பசி, ஒத்துக் கொள்ளாத உணவுகள், அதிக துார பயணம், சூரிய ஒளி, மாதவிடாய் கோளாறுகள் மைக்ரேன் வருவதற்கான காரணிகள்.

தலையில் அடிபடுவது, தொற்று நோய்கள், மூளைக் காய்ச்சல், மூளையில் கட்டி அல்லது ரத்த குழாய் வெடிப்பது, பார்வை கோளாறுகள் போன்ற காரணங்களால் தலைவலி வரலாம்.