சிலுசிலுன்னு ஒரு வனக்குளியல் போடுவோமா?
வனக்குளியல் என்றால் வனப் பகுதிகளிலுள்ள அருவிகளிலோ அல்லது நீர் நிலைகளிலோ குளிப்பது என்று பொருள் அல்ல.
மாறாக வனக்குளியல் என்பது எந்த மருந்துகளும் இல்லாமல், உடல், மனம் மற்றும் ஆன்மா அடையும் ஆரோக்கிய நிலை.
ஐந்து புலன்களையும் இயற்கையின் சூழலுடன் மூழ்கடித்து, ஆழ்ந்த நம்பிக்கையுடன், தயக்கமின்றி செலவழிக்கும் நேரமிது; இயற்கையுடனான உணர்ச்சி பிணைப்பை வலுப்படுத்துகிறது.
மனித நரம்பு மண்டலத்துக்கும், இயற்கை உலகுக்கும் இடையிலான இயற்கையான இணைப்பு, 'இயற்கை நியூரான்கள்' என குறிப்பிடப்படுகின்றன.
இதுதான், 'பயோபிலியா' விளைவு என்பதாகும். நீங்கள் மலைவாசஸ்தல சாலையில் வாகனம் ஓட்டும்போது, குளிர்ந்த காற்றுடன் பசுமை கம்பள காட்சி மனதை அள்ளும்.
சில நிமிடங்கள் காரை நிறுத்தி, உங்களை அனைத்து புலன்களாலும், இயற்கையை ரசிக்க கட்டாயப்படுத்துகிறது. இது மனிதர்களின் உள்ளார்ந்த பயோபிலியா.
வனக்குளியலால் அனைத்து எதிர்மறை ஆற்றல்களும் அகற்றப்படுகின்றன. நாம் மண்ணின் நுண்ணுயிரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறோம்.
இதனால், உடலில் நேர்மறை ஆற்றல் பெருகி, நன்மை ஏற்படுகிறது.