பூசணிக்காய் பாஸ்தா செய்து அசத்தலாமா?

தேவையானப் பொருட்கள்: மஞ்சள் பூசணிக்காய் - 1 கப், பால் - 1 கப், முந்திரி - 6.

பாஸ்தா - 0.75 கப், பெரிய வெங்காயம் - 1, பனீர், உப்பு மற்றும் சமையல் எண்ணெய்- தேவையானளவு.

அடுப்பில் பெரிய பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பாஸ்தாவை போடவும். அதில், சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விட்டு தனியாக எடுத்து வைக்கவும்.

பின், மஞ்சள் பூசணிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, வேக வைத்து ஆற வைக்கவும்.

மிக்ஸி ஜாரில் வேக வைத்த பூசணிக்காயுடன் முந்திரி பருப்பு, பால் சேர்த்து அரைக்கவும்.

தோசை கல்லில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், பனீரை சதுர வடிவில் நறுக்கி, பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பனீர், அரைத்து வைத்த பூசணிக்காய் விழுதை சேர்த்து, நன்றாக வேக வைக்கவும்.

அதனுடன் வேகவைத்த பாஸ்தாவையும் சேர்த்து, நன்றாக கிளறி 10 நிமிடம் கழித்து இறக்கினால், அவ்வளவுதான் சுவையான பூசணிக்காய் பாஸ்தா இப்போது ரெடி.