சிவப்பு இறைச்சியில் அதிர்ச்சி ஆபத்து
குடல் அழற்சி நோய் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் தெளிவாக
அறியப்படவில்லை. உடல் எடை இழப்பு, கடும் வயிற்றுப் போக்கு, வயிற்று வலி
ஆகியவை இதன் அறிகுறிகள்.
இந்த நோயால் கண் பிரச்னை, தோல் நோய்கள் துவங்கி, குடல் புற்று நோய் வரை அடுத்தடுத்து ஏற்படலாம்.
உணவுப்பழக்கம், மன அழுத்தம் ஆகியவற்றால் இந்த நோய் தீவிரமடையும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் இது தொடர்பாக சீனாவில் நடந்த ஆய்வில், ஒரு பகுதி
எலிகளுக்கு சிவப்பு இறைச்சி எனும் பன்றி, ஆடு, மாடு ஆகியவற்றின் இறைச்சி
தினமும் தரப்பட்டது.
மற்றொரு பகுதி எலிகளுக்கு வழக்கமான உணவு
தரப்பட்டது. டெக்ஸ்ட்ரான் சல்பேட் சோடியம் எனும் வேதிப்பொருளை பொதுவாக
கொடுத்து, குடல் அழற்சி நோயை துாண்டினர்.
2 வாரம் கழித்து ஆராய்ந்ததில், சிவப்பு இறைச்சி உட்கொண்ட எலிகளுக்கு குடல் அழற்சி நோய் தீவிரமடைந்திருந்தது. மற்றவைகளுக்கு அவ்வளவு தீவிரமடையவில்லை.
சிவப்பு இறைச்சி உடலுக்கு நன்மை செய்யும் குடல்
பாக்டீரியாக்களை அழிப்பதும், தீமை செய்யும் பாக்டீரியாக்களை பெருகச்
செய்வதே இதற்கு காரணமாகும்.
எலிகள் மீதான ஆய்வு
மனிதர்களுக்கும் பொருந்தும். தினமும் 100 - 120 கிராம் சிவப்பு இறைச்சி
உண்ணும் மனிதர்களுக்கு, குடல் அழற்சி தீவிரமடையும் வாய்ப்புள்ளது.
ஏற்கனவே
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் 2 முறை மட்டும் இதேயளவு என இறைச்சி
உண்பதை குறைத்துக் கொள்வது நல்லது என விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.