நிச்சயதார்த்தத்தை உறுதிப்படுத்திய சித்தார்த், அதிதி ராவ்!

நடிகர் சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் என தகவல் வைரலான நிலையில், நிச்சயம் தான் என சித்தார்த் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி பின்னர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினி துறையில் நடித்து வருகிறார்.

அதிதி ராவ் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா, சைக்கோ போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.

'மஹாசமுத்திரம்' என்ற படத்தில் நடித்தபோது நடிகை அதிதி ராவ் உடன் சித்தார்த்திற்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

காதல் குறித்து இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனாலும் இரண்டு பேரும் திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்

இன்று சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவள் ஓகே சொன்னாள் என்றும், Engaged என்றும் தெரிவித்துள்ளார். அதிதியும் இதேபோல பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி சித்தார்த் மற்றும் அதிதி ராவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

நீண்ட காலங்களாக இவர்களின் காதல் விவகாரம் தொடர்ந்து வெளிப்படையாக இல்லாமல் இருந்துவந்த நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

விரைவில் இவர்களது திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.