கர்ப்பகாலத்தில் சருமப் பராமரிப்புக்கு என்ன செய்யலாம்?

கர்ப்பமான பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஜொலிக்கும் சருமம் சிலருக்கு வந்துவிடும்.

ஆனால் சிலருக்கோ அப்படி ஏற்படுவதில்லை. முகப்பரு, சரும வறட்சி, வெடிப்புகள், தடிப்புகள், வீக்கம் மற்றும் கருமையான திட்டுகள் போன்ற பல சரும பிரச்னைகள் இந்த சமயத்தில் வரலாம்.

கர்ப்பகாலத்தை எதிர்நோக்கும் பெண்கள் சில சருமப்பராமரிப்பு விஷயங்களில் கவனம் செலுத்தலாம். இதனால் மிளிரும் தோற்றம் எளிதில் பெற முடியும்.

ஹார்மோன் மாற்றம் மட்டுமல்லாமல் உடல் சூடு அதிகரித்தாலும் முகப்பரு வரும். அதனால் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். மேலும் நீர் சத்து அதிகம் உள்ள காய்கனிகளை உண்ணலாம்.

பப்பாளி, மாம்பழம் போன்ற பழங்களை கூழ் போல் செய்து முகத்தில் பேஷியல் செய்யலாம். முகத்தில் மேல் இருந்து கீழ்நோக்கி, ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முகம் பொலிவு பெரும்.

குழந்தை வளர்ச்சிக்காக கொடுக்கப்படுகிற கால்சியம், இரும்புசத்து மற்றும் வைட்டமின் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்து வந்தால் இந்த முடி கொட்டுவது குறையும்.

முடி உதிர்வை தவிர்க்க இந்த சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவி, மசாஜ் செய்யலாம்.

முல்தானி மட்டி நான்கு தேக்கரண்டி, எடுத்து அதில் ரோஸ் வாட்டர் ஆறு தேக்கரண்டி கலந்து, கை, கால், பாதம், உள்ளங்கால் பகுதிகளில் பூசி, மசாஜ் செய்யுங்கள். வெடிப்புகள் குறையும். சருமம் மிளிரும்.