புகை உயிருக்கு பகை: அச்சுறுத்தும் நுரையீரல் புற்றுநோய்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் நுரையீரல் புற்றுநோயால் கிட்டத்தட்ட 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு வரை உலக அளவில் மார்பகப் புற்றுநோய் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை விட சற்று அதிகமாக இருந்தது. இருப்பினும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதில் நுரையீரல் புற்றுநோய் ஆபத்தானதாக தொடர்கிறது.
2020இல் சுமார் 18 லட்சம் பேர் நுரையீரல் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
பெருங்குடல் புற்றுநோய் இறப்புகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம் என உலக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் புகைப்பிடிக்கும் பழக்கம் தான் என உலக சுகாதார துறை அமைச்சகம் குறிப்பிடுகிறது.
காற்று மாசு, டீசல் இன்ஜின், வெளியிடும் புகை மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நச்சுப் புகையால் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
நுரையீரல் புற்றுநோய் சிகிச்சையின்போதும் மற்றும் அது முடிந்த பிறகும் புகை பிடிக்காமல் இருப்பது நல்லது.
ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ஆசியாவில் தான் அதிகமான நோயாளிகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.