இல்னஸ் ஆன்சைட்டி என்றால் என்ன? எப்படி சரிசெய்யலாம்?

இல்னஸ் ஆன்சைட்டி (Illness Anxiety Disorder - IAD) என்பது தீவிரமாக கவலைப்படும் ஒரு மனநலப் பிரச்னையாகும்.

மேலும் இது மனநோயின் துவக்க நிலை. இவர்களுக்கு எதிர்மறையான சிந்தனை வரும்.

ஏதாவது ஒரு துக்க நிகழ்வுக்கு செல்லும் போது, நாமும் இறந்துவிடுவோமா, நமது குடும்பத்தை யார் பார்ப்பது என்ற பதட்டம் ஏற்படும்.

எதிர்மறையாக யோசிப்பவரை சில பயிற்சிகள் மூலம் நேர்மறையாக சிந்திக்க வைக்கலாம்.

இவர்கள் கேரம், செஸ், பல்லாங்குழி ஆடலாம். விளையாட்டில் ஈடுபடும் போது மனம் சந்தோஷமாகும்.

இவர்கள் சில மாதங்களுக்கு தவிர்க்க முடியாத உறவினர்களை தவிர, பெரும்பாலும் துக்க வீட்டிற்கு செல்லக்கூடாது.

மனதிற்கு பிடித்த இசையை குறைந்த ஒலியில் கேட்க வேண்டும். மனதிற்கு பிடிக்காத ஒலியை கேட்காமல் இரு காதுகளிலும் 'பஞ்சு' வைத்துக்கொள்ளலாம்.

இரவில் அலைபேசியை ஓரத்தில் வைத்துவிட்டு நன்றாக துாங்க வேண்டும்.

தன்னம்பிக்கை புத்தகங்களை படிக்க வேண்டும். இவற்றை செய்வதால் இந்த பாதிப்பை எளிதில் குணப்படுத்தலாம்.