உங்கள் வயிற்று உஷ்ணத்தைத் தணிக்க ஏற்ற சில உணவுகள் !

தினமும் மதிய சாப்பாட்டில் மோர் கண்டிப்பாக இடம் பெறவேண்டும்.

இளநீர், நுங்கு என ஏதாவதொன்றை வாரம் ஒருமுறை குடிக்கலாம்.

வெள்ளரிக்காய், தர்பூசணி, திராட்சை உள்ளிட்டவற்றில் நீர்ச்சத்து அதிகம்.

பால் பொருட்கள் ஒவ்வாமை கொண்டவர்கள் மோருக்கு பதிலாக வெங்காயம் சாப்பிடலாம்.

காலை எழுந்ததும் சாதம் வடித்த கஞ்சியைக் குடிப்பது காலை வயிற்று உஷ்ணத்தைப் போக்க உதவும்.

டீ, காஃபி போன்ற கஃபைன் பானங்களை வெறும் வயிற்றில் குடிப்பது அமிலத்தை அதிகரிக்கும் என்பதால் கிரீன் டீ குடிக்கலாம்.