பெண்களின் இதயத்தை காக்கும் அரண் நடைபயிற்சி!!

கொழுப்பில், கெட்ட கொழுப்பு - எல்.டி.எல்., நல்ல கொழுப்பு - ஹெச்.டி.எல்., என்ற இரு வகைகள் உள்ளன. எல்.டி.எல்., 100 மி.கி., / டெ.லி.,க்குள் இருக்க வேண்டும்.

ஹெச்.டி.எல்., பெண்களுக்கு 50 - 60 மி.கி., / டெ.லி., ஆண்களுக்கு40 மி.கி., / டெ.லி., இருக்க வேண்டும்.

நல்ல கொழுப்பு ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இருக்கும் விதமாகவே இயற்கையில் உடலமைப்பு உள்ளது. எனவே, அத்தனை எளிதில் பெண்களுக்கு மாரடைப்பு வராது.

ஆனால் வாழ்க்கை முறை மாறியதால், இதுவும் இப்போது மாறி வருகிறது. நல்ல கொழுப்பு 40 மி.கி., / டெ.லி.,க்கு மேல் இருக்கும் பெண்களை, சமீப ஆண்டுகளில் பார்ப்பதே அபூர்வமாக இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

மிக அரிதாக 60 - 70 மி.கி., /டெ.லி., நல்ல கொழுப்பு உள்ள பெண்களை பார்ப்பதாகவும் கூறுகின்றனர்.

நல்ல கொழுப்பை அதிகப்படுத்த இயற்கை கொடுத்த ஒரே வழி நடைபயிற்சி.

ஓட்டமும், நடையுமாக வாரத்தில் ஐந்து நாட்கள் தினமும் 45 நிமிடங்கள் நடந்தால், ஆறு மாதங்களில் நல்ல கொழுப்பு 4 - 6 மி.,கிராம் அதிகமாகும். ஒரு ஆண்டு நடந்தால், 10 மி.கி., அதிகமாகும்.