கொழுப்பை கரைக்க உதவும் இயற்கை உணவுகள் சில...!

எலுமிச்சையில் வைட்டமின் சி, நார்ச்சத்து, தனிம ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்கள் உடல் செல்கள் சீராக செயல்பட உதவும்.

கிரீன் டீயில் தெர்மோஜெனிசிஸ் அதிகளவில் இருப்பதால், கொழுப்பை குறைக்க உதவும். ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.

நட்ஸ் வகைகளில் எண்ணற்ற வைட்டமின், மினரல்ஸ் மற்றும் நார்ச்சத்து அடங்கியுள்ளன. உடல் நச்சுக்களை நீக்க உதவுவதுடன், திருப்தி அளவை அதிகரிக்கிறது.

வைட்டமின்கள், புரோட்டீன், கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவான முட்டை, உடல் எடையை குறைக்க தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது.

சியா விதைகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதுடன், தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும்.

ஆரஞ்சு பழத்திலுள்ள 'ஹைட்ராக்ஸிசிட்ரிக் ஆசிட்' உடலில் தேங்கும் சர்க்கரை கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது. தினசரி உணவில் சேர்த்து கொண்டால், உடல் எடை குறைய துவங்கும்.

வைட்டமின்கள் ஏ. சி, கே நிறைந்த பிராக்கோலி, கெட்ட கொழுப்புகளை குறைக்கவும், உடலில் இருந்து நச்சு பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது.

தக்காளியில் லைகோபின் இருப்பதால், வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. உடலின் எடையை குறைப்பதோடு, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது.

கொழுப்பு செல்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பூண்டு உதவுகிறது.

நார்ச்சத்து நிறைந்த பசலைக்கீரை எடுத்து கொள்வது பசியை குறைப்பதோடு, திருப்தியை அதிகரிக்கும்.