நம்மிடமே இருக்கு மருந்து... ஓமம் !

இது பசியைத் துாண்டி விடும்; உணவை எளிதில் ஜீரணமாக உதவும். வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும்.

ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து, பனை வெல்லம் சேர்த்து, காலை வேளையில் குடித்து வர, உடல் பலம் பெற்று, சோர்வு நீங்கும்.

வயிற்று பொருமல், அஜீரணக் கோளாறு ஏற்பட்டால், 100 கிராம் ஓமத்தை, 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, வடிகட்டி குடித்து வர தீர்வு கிடைக்கும்.

குடலிரைச்சல், இரைப்புக்கு ஓமம் சிறந்த தீர்வாக உள்ளது.

ஓமத்தை பொடித்து, உச்சந்தலையில் தேய்த்தால், ஜலதோஷம் குறையும்; ஓமப்பொடியை துணியில் கட்டி முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

ஓமத்தில், 'சூப்' தயாரித்து குடித்தால், உடல் சுறுசுறுப்படையும்.

ஓமத்தில் ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.