வெறி நாய்க்கடி தடுப்பூசி செலுத்தினாலும் ரேபிஸ் நோயால் உயிரிழப்பு ஏற்படுவது ஏன்?

நாய், பூனை போன்ற எந்த பிராணி கடித்திருந்தாலும், உடனடியாக சோப்பு, கிருமி நாசினி கொண்டு குறைந்தது, 10 முறையாவது, அந்த இடத்தை கழுவ வேண்டும்.

பின், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும்.

குறிப்பாக, நாய் கடித்த இடம் மிக ஆழமாக இருந்தால், ரேபிஸ் தடுப்பூசியுடன், 'இம்யூனோகுளோபளின்' மருந்தையும் சேர்த்து செலுத்த வேண்டும்.

ஏனென்றால், தடுப்பூசி செலுத்தினால், ஏழு நாட்களுக்கு பின், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அதேபோல், நாய் கடித்தால், 10 நாட்களுக்கு பின் தான் ரேபிஸ் பாதிப்பை ஏற்படுத்தும். இடையில் இருக்கும் மூன்று நாட்கள் தான் முக்கியமானது.

நாய் கடித்தவுடன் தடுப்பூசி செலுத்தியிருந்தால், ரேபிஸ் தாக்குவதற்கு முன், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அப்பாதிப்பை கட்டுப்படுத்தும்.

அந்நோய் வந்து விட்டால், கட்டுப்படுத்த எந்த மருந்தும் இல்லை; உயிரிழப்பையும் தடுக்க முடியாது.

எனவே, நாய் கடித்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெறுவதுடன், நான்கு தவணை தடுப்பூசியையும் முறையாக செலுத்த வேண்டுமென்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.