கொளுத்தும் வெயிலை 'குட்டீஸ்'கள் சமாளிக்க சில டிப்ஸ்...!
உடலில் இருந்து அதிகளவிலான வியர்வை உள்ளிட்ட நீரிழப்புகள் ஏற்படுவது பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே, குழந்தைகளுக்கு போதியளவு தண்ணீர், பழச்சாறுகள் தரலாம்.
விதவிதமான பேஷன் உடைகள் இருந்தாலும், வெளிர் நிற காட்டன் உடைகளை உடுத்தும்போது, குழந்தைகளுக்கு வசதியாகவும், நடமாட எளிதாகவும் இருக்கும்.
வெயில் கால நோய்களைத் தடுக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது முக்கியம். அதிக எண்ணெய் மற்றும் காரத்தை தவிர்த்து எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை தரலாம்.
உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தயிர், மோர், இளநீர், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சைப்பழம், தர்பூசணி, வெள்ளரி மற்றும் காய்கறி சாலடுகள் போன்றவற்றை தினசரி மெனுவில் சேர்க்கலாம்.
பள்ளிக்கு அனுப்பும்போது ஸ்நாக்ஸ் பாக்ஸில் ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களை கொடுத்தனுப்பலாம்.
ஸ்பெஷல் வகுப்புகளுக்காக வெளியே செல்லும் போது, வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் சன்ஸ்கிரீன் லோஷன்கள், சன் கிளாஸ்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.