கொங்கு பகுதியின் ஸ்பெஷல் 'கருப்பட்டி அதிரசம்'

அரிசியை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அதிரசம் பதத்திற்கு அரைத்து, மாவைச் சல்லடை கொண்டு சலித்து பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பாகு காய்ச்ச தேவையான தண்ணீரை ஊற்றி, அதில் 400 கிராம் கருப்பட்டியை சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும்.

மாவு கலவையை இரண்டு நாட்கள் வைத்து எடுத்தப் பிறகு, அதில் நெய் சேர்த்து பிசைய வேண்டும்.

மாவுடன் வெள்ளை எள்ளையும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவை தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் கருப்பட்டி அதிரசம் தயார்.

இரண்டு நாட்கள் மாவை ஊற வைக்கப்பதற்கு பதிலாக, உடனடியாக அதிரசம் செய்ய வேண்டும் என்றால், சிறிதளவு சோடா உப்பு சேர்த்து செய்யலாம்.