திரையுலகில் 28 ஆண்டுகள் நிறைவு : நன்றி சொல்லும் சுதீப்

சுதீப் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

இவர் ஆரம்பத்தில் கன்னட சினிமாவில் பணியாற்றினார். அங்கு ரசிகர்களால் அன்புடன் கிச்சா என்று அழைக்கப்படுகிறார்.

'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர் நடிகர் சுதீப்.

அதன்பின் தமிழில் ' புலி, பாகுபலி 1, முடிஞ்சா இவன புடி' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஹிந்தி, தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள சுதீப் திரையுலகில் நுழைந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த அற்புதமான என்டர்டெயின்மென்ட் துறையில் 28 ஆண்டுகள் என்பது எனது வாழ்க்கையில் மிக அழகானதொரு பகுதி. - சுதீப்

பணிவாய் உணர்கிறேன். இந்த விலைமதிப்பற்ற பரிசுக்காக நான் ஒவ்வொருவருக்கும் அன்பும், மரியாதையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்- சுதீப்