ஐவரி நிறப் புடவையில் ரசிகர்களை கவர்ந்த சமந்தா!
நடிகை சமந்தாவின் 'யசோதா' படத்திற்குப் பிறகு 'சாகுந்தலம்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது.
ஜனவரி 9 ஆம் தேதி, படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பிரமாண்டமாக நடந்த சாகுந்தலம் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சமந்தா அணிந்து வந்த ஐவரி நிறப் புடவை ரசிகர்களை கவர்ந்துள்ளது.
டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு ஐவரி நிறப் புடவையுடன், ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து அழகு மிளிர விசிட் செய்தார் சமந்தா.
புடவைக்கு ஏற்ப அழகிய முத்துக்கள் பதித்த சிறிய காதணிகளை மட்டுமே சமந்தா அணிந்திருந்தார்.
மேலும் வரையப்பட்ட புருவங்கள், மையிட்ட கண்கள், லைட் கலர் லிப்ஸ்டிக், கொஞ்சம் ஹைலைட்டர் என எளிமையான அலங்காரத்துடன் அழகில் ஆர்ப்பரித்தார் சமந்தா.