சம்மர் பேஷனுக்கு சூப்பர் லுக்... கியாராவின் டிரெண்டிங் லாங் ஜாக்கெட் !
பாலிவுட் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி.
எம்.எஸ்.தோனி படம் மூலம் அனைவருக்கும் நன்றாக பரிட்சயமான அவர், ஹிந்தி, தெலுங்கு படங்களில் பிஸியாக உள்ளார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள கியாரா, அடிக்கடி கலக்கலான பேஷன் உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார்.
சமீபத்தில் சிவப்பு நிற கோ- ஆர்ட் செட்டில் கியாரா பதிவிட்ட புகைப்படங்கள் பேஷன் பிரியர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
சிவப்பு நிறங்களின் கலவையில் நீளமான கோட் ஜாக்கெட், ஸ்வீட்ஹார்ட் நெக்லைன் ப்ரேலெட்- டாப்ஸ் மற்றும் பேன்ட் கியாராவுக்கு ஸ்டைலிஷ் மற்றும் ரிச் லுக்கை அளிக்கிறது.
சம்மர் பேஷனுக்கு உகந்த ஸ்டைலிஷ் உடையாக இது உள்ளது.
பிங்க் நிற புடவையில் வெள்ளை நிற ப்ளங்கிங் நெக்லைன் பிளவுஸில் பாரம்பரியத்துடன் கூடிய மாடர்ன் லுக்கில் கியாரா அத்வானி.