பொன்னுக்கு வீங்கி அறிகுறிகள் அறிவோமா?

பொன்னுக்கு வீங்கி என்பது ஒரு வைரஸ் கிரிமியால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இந்த அம்மைக்கு மணல்வாரி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

காது மடலுக்கு கீழுள்ள உமிழ் நீர் சுரப்பியை வைரஸ் தொற்று தாக்குவதால், தாடையின் இருபுறமும் வீக்கம் தோன்றும்.

உடல் வெப்பம், நோய் தாக்கம் காரணமாக கண்கள் சிவந்து வீக்கமாக காணப்படும்.

காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், கண்ணீர் நீர் வடிதல், முகம் மற்றும் காதின் பின்பகுதியில் வியர்குரு போன்ற அறிகுறிகளும் தோன்றும்.

மேலும் தலைவலி, கழுத்து வலி, பசியின்மை, பலவீனம், சாப்பிடும்போதோ அல்லது விழுங்கும் போதோ வலி ஏற்படும்.

சிலருக்கு உடலில் நீர்க்கட்டியை போல் சிறிய கொப்பளங்கள் தோன்றும். அவை கொஞ்சம் பெரிதாகி, நீர் கோர்த்து காணப்படும். பின்னர் நீர் வறண்டு கொப்பளங்கள் உதிரும்.