நீண்ட கால காதலரை கரம் பிடித்த டாப்சி பன்னு...
தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படம் மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்சி.
பின் கேம் ஓவர் , ஆரம்பம் , காஞ்சனா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திப் படங்களில் கவனம் செலுத்தி வந்தவர், அங்கு முன்னணி நடிகையாகவும் தடம் பதித்தார்.
இவர், கடந்த 10 வருடங்களாக டென்மார்க்கை சேர்ந்த பாட்மிண்டன் பயிற்சியாளர் மத்யாஸ் போ என்பவரைக் காதலித்து வருகிறார்.
இவர்களது திருமணம் கடந்த 23-ம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது.
சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், சில திரைபிரபலங்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டனர்.
இவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.