தோல்விக்கான ஒரே காரணம்... ராபின் ஷர்மாவின் தன்னம்பிக்கை வரிகள்!

பெரிய கனவு காணுங்கள். சிறியதாகத் துவங்குங்கள். இப்போதே செயல்படுங்கள்.

திறமை இருப்பது அற்புதமானது. தன்னம்பிக்கை இருப்பது அதைவிட முக்கியமானது.

காலப்போக்கில் உண்டாகும் சிறிய தினசரி முன்னேற்றங்கள், பிரமிக்க வைக்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கும்.

முயற்சிக்காமலேயே இருப்பதுதான் தோல்விக்கான ஒரே காரணம்.

உங்களுக்கு எது திரும்ப வர வேண்டும் என மிகவும் விரும்புகிறீர்களோ, அதை பிறருக்கு கொடுங்கள்.

எளிமையின் ஆற்றலை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

வெற்றி என்பது சில நேரங்களில் சரியான முடிவை எடுப்பதில் இருப்பதில்லை. அதற்கு மாறாக ஏதாவதொரு முடிவை எடுப்பதில்தான் உள்ளது.

நீங்கள் அதிகம் பயப்படாவிட்டால், பெரியதாக எதையும் சாதிக்கவில்லை என அர்த்தம்.

மாற்றம் என்பது துவக்கத்தில் மிக கடினமானது; இடையில் மிக குழப்பமானது. ஆனால், இறுதியில் மிகவும் சிறந்தது.